200 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார். உலகச் சம்பியன்ஷிப் தடகளம் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 6.30 மணிக்கு ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்சுற்று நடைபெற்றது.
இதில் உசைன் போல்ட்இ காட்லின் உள்ளிட்ட 9 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் உசைன் போல்டுக்கு காட்லின் கடும் சவாலாக இருப் பார் என்று கருதப்பட்டது. இருந்தாலும், போல்ட் காட்லினை பின்னுக்குத் தள்ளி தங்க பதக்கம் வென்றார். உசைன் போல்ட் பந்தய தூரத்தை 19.55 வினாடிகளில் கடந்தார்.
காட்லின் 19.74 வினாடிகளில் கடந்து 2ஆ-வது இடத்தையும், தென்னாபிரிக்க வீரர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஏற்கனவே, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்திலும் உசைன் போல்ட்தான் சம்பியன் பட்டம வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





