தரையிலிருந்து 700 அடி உயரத்தில் குன்றின் விளிம்பில் குட்டிக் கரணம்!!

530

british_3நோர்வேயில் றின்ஜ்டல்ஸவட்நெட் ஏரிக் கரையோரத்திலுள்ள தரையிலிருந்து 700 மீற்றர் உயரமான பூதமொன்றின் நாக்காக வர்ணிக்கப்படும் திரோல்துங்கா குன்றுப் பகுதியின் விளிம்பில் துணிகரமாக குட்டிக் கரணம் அடித்து பிரித்தானிய இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சுர்ரே பிராந்தியத்தைச் சேர்ந்த டொபி செகார் (21 வயது) என்ற இளைஞரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

நீண்ட காலமாக குட்டிக் கரண பயிற்சியை மேற்கொண்டே இந்த துணிகர முயற்சியில் களம் இறங்கியதாக அவர் தெரிவித்தார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இந்த குட்டிக் கரண சாதனையை மேற்கொள்ளும் முன் அவர் சிறிது பதற்றமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது