சட்டவிரோதமாக இத்தாலி நோக்கி சென்ற படகு மூழ்கியது; 200 பேர் வரை காணவில்லை

497

1408252992Italyசட்டவிரோதமாக இத்தாலிக்கு குடியேறச் சென்ற அகதிகளின் படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் கவிழ்ந்ததால் கடலில் மூழ்கியுள்ளது.

இதனால் படகில் பயணித்த சுமார் 200 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த சுமார் 400 பேர் லிபியாவின் கடற்கரை நகரமான ஜுவாராவில் இருந்து ஒரு படகில் இத்தாலி நாட்டை நோக்கி புறப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மக்களை ஏற்றிச்சென்ற அந்தப் படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்ததுள்ளது.

லிபியா நாட்டு கடலோரக் காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று 201 பேரை மட்டும் உயிருடன் காப்பாற்றி, கரைக்கு அழைத்து வந்தனர்.

கடலில் மூழ்கிய மேலும் சுமார் 200 பேரின் நிலமை பற்றிய தகவல்கள் தெரியவில்லை என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவகின்றது.

கடந்த 8 மாதங்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் ஆசையில் சட்டவிரோதமாக படகுகளில் சென்ற சுமார் 2,300 பேர் கடலுக்குள் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.