புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா தமிழில் பேச முயற்சி செய்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா புலி படம் மூலம் மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ருதி ஹாஸனும் உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹன்சிகா பேசுகையில்,
அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். குஞ்சம் குஞ்சம் தமிழ் பேசுவேன். நான் வேலாயுதம் படத்தில் விஜய் சாருடன் ஜோடியாக நடித்தேன்.
அதன் பிறகு தற்போது நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சிம்பு சாருக்கு நன்றி. தமிழில் பேசத் திணறினாலும் முயற்சி செய்தார் அவர்.
தமிழ் தெரிந்தாலும் கூட பலரும் ஆங்கிலத்தில் பேசுகையில் ஹன்சிகா தமிழில் பேச முயன்றுள்ளார்.





