வவுனியாவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் வட மாகாணத்திற்கான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு நேற்று (28.08.2015) வெள்ளிக்கிழமை சிறு நீர் முகாமைத்துவப் பொருட்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசத்திலிருந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்ட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்விற்கு மோட்டிவேசன் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர். மோட்டிவேசன் நிறுவன பணிப்பாளர், வைகறை முகாமையாளர், ஆயுள்வேத வைத்திய அத்தியட்சகர், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணிமனை வைத்தியர், வரோட் நிறுவனத்தின் பணிப்பாளர், ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
-பிராந்திய செய்தியாளர் –






