ஓய்வு எப்போது. மனம் திறக்கும் உசைன் போல்ட்!!

243

usain-boltஉலகின் அதிக வேக ஓட்டப் பந்தய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் உசைன் போல்ட். கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 x 100 மீட்டர் ஓட்டங்களில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட், தற்போது பீஜிங் நகரில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் தனது எதிர்காலம் குறித்து கூறியதாவது:-

ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மேலும் ஒரு வருடத்திற்கு நான் விளையாட வேண்டும் என என்னுடைய அனுசரணையாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ‘லண்டனில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் (2017) போட்டியில் பங்கேற்பதில் நீ தீவிரமாக இருக்கவில்லை என்றால், நான் போகச் சொல்லமாட்டேன்’ என்று எனது பயிற்சியாளர் கூறினார்.

மேலும் ஓராண்டுக்கு என்னால் ஓட முடியும் என்று நினைத்தால் ஓடுவேன். எனவே, ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு நான் என்ன நினைக்கிறேனோ என்பதைப் பொறுத்துதான் எதிர்காலம் இருக்கும். போட்டியில் கவனத்துடன் சென்றுகொண்டிருந்தால், தொடர்ந்து விளையாடுவது உறுதி. எனவே, ரியோவில் எப்படி விளையாடுகிறேன் என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, 2017ம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் உசேன் போல்ட் பங்கேற்பது 50-50 என்ற நிலையிலேயே உள்ளது.