வவுனியாவில் குளப்பகுதியில் குடியிருப்பவர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் மனு கையளிப்பு!!

556

வவுனியா வைரவப்புளியங்குளத்தை அண்மித்து குடியிருப்பவர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சாள்ஸ் நிர்மலனாதனை இன்று காலை (29.08.2015) சந்தித்து ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அம் மனுவினை ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைப்பதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி தமது பதவியேற்பின் பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடமும், கமநல உதவி ஆணையாளாரிடமும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும், இப் பகுதியில் குடியிருக்கும் அனைவரும் உற்றுமையுடன் நின்று இப்பிரச்சனைக்கு தீர்வுகாண ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

-பிராந்திய செய்தியாளர்-

P1010699 P1010704 P1010708 P1010711