கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் நேற்று புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோசன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கை கலைத்துறையில் சிறந்து விளங்கிய சிவலிங்கம் நிரோசன், பல குறுந் திரைப்படங்களையும், பாடல்களையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






