வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!!(படங்கள்)

550

வவுனியா நெளுக்குளம் தட்சநாதன்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்..

வவுனியா நகரசபையின் கீழ் வரும் தட்சணாங்குளம் இந்து மயானம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படவில்லை. அதேபோன்று நெளுக்குளம் இந்து மயானம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் வருகின்றது. பிரதேச சபையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலிருக்கும் நெளுக்குளம் இந்து மயானத்தை சுற்றி காடுகளாக கட்சியளிப்பதோடு, குறிப்பிட்ட இரண்டு மயானங்களுக்கும் நடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் தமது உறவினர்கள், நண்பர்களின் இறுதி நிகழ்வுகளுக்கு வருகைதருகின்றனர்.

மயானத்தை புனரமைப்பு செய்வதற்கு ஒருவரும் முன்வருவது இல்லை என்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெளுக்குளம் இந்து மயானத்தில் இறந்தவர்களுக்கு இறுதிக் கிரிகைகள் செய்வதற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அத்துடன் இரண்டு மயானத்திலும் கூடாரங்கள் இன்மையால் மழைக் காலத்தில் இறந்தவர்களுக்கு நிகழ்வுகளை செய்வதற்கு மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பருவமழை எதிர்பார்க்கப்படுகின்றது. கூடாரங்கள் இன்மையால் பல அசௌகரியங்களை தாம் எதிர்கொள்ளவுள்ளதையும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெளுக்குளம் இந்து மயானத்தை புனரமைப்பு செய்து தருவதாக கூறப்பட்டபோதும் நடவடிக்கைள் எதுவும் இடம்பெறவில்லை என கிராம அபிவிருத்தி தலைவர் தெரிவித்தார்.
தமது இக் கோரிக்கை கோரிக்கையாக மட்டும் நின்றுவிடாமல் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA