தம்புள்ளை – கெக்கிராவ பிரதான வீதியில் மிரிஸ்கோனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





