பிரபாகரணை கொலை செய்யவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் : விநாயகமூர்த்தி முரளிதரன்!!

525

2009428165344752580_8

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என புலிகள் அமைப்பின் முன்னாள் படைத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் நான் உண்மையிலேயே மதிக்கின்ற ஒரு தலைவர். அவ்வாறான ஒரு தலைவன் மடிந்தது என்பது உண்மையானதுதான்.

பிரபாகரன் கைது செய்யப்பட்டு சுடப்பட்டிருக்கலாம் என்பதைவிட அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடைய நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்

அவரை இலங்கை இராணும் கைது செய்து கொலை செய்யும் அளவிற்கு அவர் கோழை அல்ல. ஆகவே தமிழர்களும் அவரை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறுவது தவறு.

மாறாக சுபாஷ் சந்திரபோஸ் போன்று போற்றப்படவேண்டும் என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.