விரைவில் ஹைட்ரஜன் செல்போன்கள்!!

322

get-a-larger-smartphone-batteryபேட்டரி பிரச்சினை இல்லாமல் செயல்படும் ஹைட்ரஜன் செல்போன்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

தற்போது செல்போன்கள் நமது முதன்மை நண்பனாக மாறிவிட்டன. ஆனால் திடீரென தீர்ந்துவிடும் அதன் பேட்டரி நமக்கு தலைவலியை தருகிறது. கூடுதல் பேட்டரி உதவியால் இந்த பிரச்சினையை ஒரளவு சமாளித்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் இந்த பேட்டரி தொந்தரவு முற்றிலும் தீரப்போகிறது. ஏனெனில் மின்சாரம் இல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் செல்போன்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த போன்கள் பயன்பாட்டிற்கு வந்தால், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் சார்ஜ் தீராமல் செல்போன்களை பயன்படுத்த முடியும். மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இங்கிலாந்தை சேர்ந்த இன்டலிஜென்ட் எனர்ஜி நிறுவனம் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. ஆப்பிள் போன்களை ஹைட்ரஜன் கியாஸ் நிரப்பிய குப்பியின் உதவியுடன் இயங்கி பரிசோதித்து வருகிறார்கள். தங்கள் முயற்சியில் ஏறத்தாழ வெற்றியை எட்டிவிட்டதாக அவர்கள் கூறி உள்ளனர்.