நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா – சினேகா தம்பதியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு சினேகாவும், அவரது குழந்தையும் மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த குழந்தைக்கு அழகான பெயர் ஒன்றை வைக்க பெற்றோரும், உறவினர்களும் பல பெயர்களை பரிசீலித்து வந்தனர். இந்நிலையில், தற்போது பிரசன்னா-சினேகாவுக்கு பிறந்த குழந்தைக்கு ‘விகான்’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் பிரசன்னாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தனது குழந்தைக்கு ‘விகான்’ என்று பெயர் வைக்கப்போவதாக தெரிவித்தார் என்று கூறியுள்ளார். சீனுராமசாமியின் இந்த டுவிட்டை பிரசன்னா ரீடுவிட் செய்து, இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விரைவில் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா வைக்க பிரசன்னா-சினேகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். ‘அழகி’ படத்தில் நடித்த நடிகை நந்திதாதாசின் குழந்தையின் பெயரும் ‘விகான்’ என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.





