சபாநாயகராக கரு ஜயசூரிய!!

578

karu-jayasuriya8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதன் முதல் அங்கமாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு முன்மொழியப்பட்டது.

அதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.