கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுழிக்க வைக்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் நடவடிக்கைகள்!!(படங்கள்)

799

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் கொழும்பில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது, உமேஷ் யாதவ் ஆட்டமிழந்த வேளை, கடைசி விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார்.

அப்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் தொடர்ச்சியாக இசாந்த் சர்மாவிற்கு பவுன்சராக பந்து வீசினார். இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா பிரசாத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவருக்குத் துணையாக தினேஷ் சந்திமாலும் இணைந்து கொண்டார். பின் இசாந்த் சர்மாவிற்கு ஆதரவாக மறு முனையில் துடுப்பெடுத்தாடி வந்த அஸ்வின் இணைந்தார்.

இதனால் மைதானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நடுவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர்.

அதன்பின் இலங்கை 2வது இன்னிங்சை தொடங்கியது. இசாந்த் சர்மா ஆக்ரோஷமாக பந்து வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் உபுல் தரங்கவை வீழ்த்தினார். அத்துடன் 3வது விக்கெட்டாக சந்திமாலை வீழ்த்தினார். அப்போது ஆக்ரோஷத்தின் உச்சிக்கு சென்ற இசாத் சர்மா தன் தலையில் பலமாக இரண்டு மூன்று முறை அடித்தார். அவரை இந்திய வீரர்கள் சமாதானம் செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் தலைவர் மற்றும் துடுப்பாட்ட வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘‘இசாந்த் சர்மா தனது உணர்ச்சியை வெளிக்காட்டியது மிகவும் சிறந்தது. ஆனால், அவர் தனது உணர்ச்சியை கட்டாயம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இந்தியாவின் தற்போதைய முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார்.

இன்றைய போட்டியின் சில சம்பவங்களை பார்க்கும்போது அது குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லை. வீரர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இஷாந்த் ஷர்மா கடந்த இரு நாட்களாக மைதானத்தில் நடந்துகொள்ளும் முறை கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

கனவான்களின் ஆட்டம் எனப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளும் இவர் போன்ற வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.

221261 221279 221323 221329 221337