ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லையாம். பரபரப்பு தகவல்!!

328

osama-bin-laden1-640x360சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­யான ஒசாமா பின்­லேடன் இன்னும் சாக­வில்லை. அவர் அமெ­ரிக்க உள­வுத்­து­றையின் பாது­காப்பில் சொகு­சாக வாழ்ந்து வரு­கிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பர­ப­ரப்பு தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க பாது­காப்பு ரக­சி­யங்­களை வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட எட்வர்ட் ஸ்னோடன். 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்­யாவில் இருந்து வரு­கிறார். இவர், சமீ­பத்தில் இணை­ய­த்தளம் ஒன்றில் வெளி­யிட்­டுள்ள கட்­டு­ரையில் ஒசாமா பின்­லேடன் சாக­வில்லை என்ற பர­ப­ரப்பு தக­வலை தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தனது கட்­டு­ரையில் அமெ­ரிக்கா குறித்து பல குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன் வைத்­துள்ளார். குறிப்­பாக ஒசாமா பின்­லேடன் சொகு­சாக வாழ்­வ­தற்­காக, சிஐஏ மாதந்­தோறும் 100,000இற்கும் மேற்­பட்ட அமெ­ரிக்க டொலர்­களை நிதி­யாக அளித்து வரு­கி­றது. இந்த தொகை சில தொழி­ல­தி­பர்கள் மற்றும் அமைப்­புக்கள் மூலம் நாஸாக் வங்கிக் கணக்கு வழி­யாக அனுப்­பப்­ப­டு­கி­றது.

ஒசாமா எங்­கி­ருக்­கிறார் என எனக்கு சரி­யாக தெரி­யாது. ஆனால், 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து தனது 5 மனை­விகள் மற்றும் ஏரா­ள­மான குழந்­தை­க­ளுடன் அமெ­ரிக்க உள­வுத்­து­றையால் பாது­காக்­கப்­பட்டு வரு­கிறார்.

இதற்கு என்­னிடம் பல ஆதா­ரங்கள் உள்­ளன. அவரைக் கொன்று விட்­ட­தாக அமெ­ரிக்கா நாடகம் ஆடு­கி­றது. இதற்கு பாகிஸ்தான் ரக­சிய அமைப்பும் உடந்தை. என தெரி­வித்­துள்ளர்.
ஒசா­மாவின் உட­லையும் யாரி­டமும் அவர்கள் காண்­பிக்­க­வில்லை. இவை­களை பயன்­ப­டுத்தி தான் ஒசா­மாவை தலை­ம­றை­வாக்கி உள்­ளனர். தாடி இல்­லாமல், இரா­ணுவ உடையில் இருப்­பதால் அவரை யாரும் இது­வரை அடை­யாளம் காண முடி­ய­வில்லை. போலி­யான ஆவ­ணங்­களை வெளி­யிட்­டதால் அவர் இறந்து விட்­ட­தாக அனை­வரும் நம்பி விட்­டனர்.

ஒசாமா உயி­ருடன் இருப்பதற்கான பல ஆதாரங்களையும், அமெரிக்கா ஒசாமாவுக்கு உதவி வருவதற்கான ஆதாரங்கள் அடங்கிய புத்தகத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.