குட்டி இள­வ­ர­ச­ராக மாறிய இளைஞர்!!

305

british-lஅமெ­ரிக்­கா­வை சேர்ந்த இளைஞர் ஒருவர், பிரித்­தா­னிய குட்டி இள­வ­ரசர் ஜோர்ஜ் போன்று ஆடை­ய­ணிந்து அதனை வீடியோ வடிவில் வெளி­யிட்­டுள்ளார்.

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம்- கேட் மிடில்டன் தம்­ப­தி­யி­னரின் மூத்த மகன் ஜோர்ஜ் உல­க­ளவில் மிகவும் பிர­ப­ல­ம ­டைந்­த­வ­ராக உள்ளார். ஊட­கங்கள் மத்­தியில் அவர் அணியும் ஆடை­களும் பிர­ப­ல­ம­டைந்து வரு­கின்­றன. . பிரித்­தா­னி­யாவின் ஜிக்பு என்ற பத்­தி­ரிகை, சிறந்த ஆடை­ய ­ணியும் ஆணாக இள­வ­ரசர் ஜோர்ஜை 49 ஆவது இடத்தில் தெரிவு செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், இவ­ரது ஆடை­களால் கவ­ரப்­பட்ட அமெ­ரிக்­காவை சேர்ந்த மேக்ஸ் க்னோப்லாச் (என்ற 23 வயது இளைஞர், இள­வ­ரசர் ஜோர்ஜ் போன்று ஆடை­ய­ணிந்து ஒரு ­வா­ர­மாக நியூயோர்க் நகரில் உலா வந்­துள்ளார்.

ஆனால், ஜோர்ஜ் போன்ற ஆடைகள் கிடைக்­கா­விட்­டாலும், ஏறத்­தாழ அதே மாதி­ரி­யான ஆடை­களை அணிந்­து­கொண்ட இவர், அதனை வீடியோ எடுத்து இணை­ய­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

இது­கு­றித்து மேக்ஸ் கூறி­ய­தா­வது, இள வரசரை போன்று வாழ முயற்சி செய்வதும் மகிழ்ச்சியாகதான் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.