களமிறங்கும் சிம்பு, எஸ் ஜே .சூர்யா – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம் தேர்தல்!!

481

simbu_sjsurya001நடிகர் சங்க தேர்தல் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது. இதில் விஷால் தரப்பில் ஒரு அணியும், சரத்குமார் தரப்பில் ஒரு அணியும் களமிறங்கவுள்ளனர்.ஏற்கனவே லயோலா கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று விஷால் தெரவித்தார். இந்நிலையில் விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக பொன்வண்ணனும் போட்டியிடுகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் துணைத் தலைவர் இடத்துக்கு கார்த்தி மற்றும் கருணாஸ் போட்டியிடுகிறார்கள்.இந்நிலையில் சரத் அணியில் ஏற்கனவே முடிவு செய்தபடி தலைவர் பதவிக்கு சரத்குமார் அவர்களும், செயலாளராக ராதாரவியும் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு மற்றும் எஸ். ஜே. சூர்யா போட்டியிடவுள்ளனர் என்று ராதாரவி நேற்று நடந்த கோவை நிகழ்ச்சியில் தெரிவித்தார்.