ஏ 9 வீதியில் பாரவூர்தி தடம் புரண்டதில் சாரதி படுகாயம்!!(படங்கள்)

589

ஏ-9 வீதியில் உள்ள கொக்காவில் பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம்புரண்டதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (01.09.2015) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முறிகண்டியை அண்மித்த கொக்காவில் ரவர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ் பிள்ளையார் கடை சோடா கம்பனிக்கு சொந்தமான பாரவூர்தியே தடம்புரண்டதாகவும் இப்பாரவூர்தியைச் செலுத்திச் சென்ற சாரதியின் தூக்கக் கலக்கத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-படங்கள் தீபன், சிந்து-

11780530_928398307225772_738852330_n 11793365_928397977225805_2059967638_n 11937881_928398060559130_1902641193_n 11943380_928398347225768_1302584237_n 11949679_928398237225779_976584937_n 11949714_928397960559140_1358811445_n 11950915_928398327225770_1762093674_n