உலகின் மிகவும் விலை­யு­யர்ந்த பொம்மை வீடு!!

321

toy8.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான உலகின் விலை­யு­யர்ந்த பொம்மை வீடு முதல் தட­வை­யாக காட்­சிக்கு வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செய­ற­்படும் கலை­ஞ­ரான எலெயின் டியஹ்ல் என்­ப­வரால் 29 அறை­களைக் கொண்ட மேற்­படி பொம்மை வீடு உரு­வாக்­கப்­பட்­டு­ள்­ளது.

அவர் இந்த பொம்மை வீட்டை உருவாக்க 13 வரு­டங்­களை செல­விட்­டுள்ளார்.அத்­துடன் அவர் பல தச்சு வேலை செய்­ப­வர்கள், கண்­ணாடி சிற்பக் கலை­ஞர்கள், வெள்ளி பொருட்­களை செதுக்­கு­ப­வர்கள் ஆகி­யோரின் உத­வி­யுடன் மேற்­படி பொம்மை வீட்­டிற்கு தேவை­யான சின்­னஞ்­சிறு தள­பா­டங்கள் மற்றும் அலங்­காரப் பொருட்களை வடி­வ­மைத்­துள்ளார்.

அத்­துடன் இந்த பொம்மை வீட்­டிற்­காக 7,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சிறிய பியானோ வாத்­தியக் கருவி, 5,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான தள­பா­டங்கள், 3,000 அமெ­ரிக்க டொலர் மற்றும் 1,840 அமெ­ரிக்க டொலர் பெறுமதியான உருவப்படங்கள் என்பனவும் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.