மலேசிய கடற்பரப்பில் பயணம் செய்த படகு மூழ்கி விபத்து : 13 பேர் பலி!!

546

maxresdefaultமலேசியாவின் மேற்கு கடற்பரப்பில் சுமார் 70 இற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபக் பெர்னம் நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தபோதிலும், 13 பேர் மட்டுமே இதுவரை கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் 13 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த குடியேறி தொழிலாளர்களை திரும்ப அந்நாட்டுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

20 இலட்சம் இந்தோனேஷிய தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாகவும் இவர்களில் பலர் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.