இராணுவ பலத்தை முழு உலகுக்கே காட்டிய சீனாவின் வெற்றி அணி வகுப்பு!!

518

_82976833_ba2b38e1-97d9-4642-96fc-6572d9ddef73

இரண்டாம் உலக போர் வெற்றி தொடர்பான அணிவகுப்புகளை சீனா நடத்தியுள்ளது. இரண்டாம் மகா யுத்தத்தின் போது ஜப்பானை தோற்கடித்ததை முன்னிட்டு, இந்த அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது சீனாவின் 80 சதவீதமான இராணுவ பலம் வெளிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சீன வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு அதிக அளவான இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் இராணுவ பலம் குறித்து உலக அளவில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனா பிராந்திய ரீதியான தளம்பல் நிலைகளை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய வெற்றி நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அலஸ்கா கடற்பரப்பில் சீனாவின் ஐந்து யுத்தக் கப்பல்களை அவதானித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.