பாகிஸ்தான் இந்திய கிரிக்கெட்?

436

1441261200_8091831_hirunews_indiandpakistanhirunewsஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த கிரிக்கட் தொடர் குறித்து, பாகிஸ்தானிய கிரிக்கட் சபை விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தானிய கிரிக்கட் சபை, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த வரும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிர்வாக கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் இணங்கியது.

இதன்போது 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 6 கிரிக்கட் தொடர்களை நடத்த இரண்டு கிரிக்கட் சபைகளும் இணங்கி இருந்தன.

எனினும் அண்மைக்காலமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலைகளால், இந்த தொடர்களுக்கான புரிந்துணர்வு குறித்து ஐயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த தொடர் நடைபெறுமா? இல்லையா? என்பதை விளக்குமாறு பாகிஸ்தான் கோரியுள்ளது.