இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் ஊசிகளின் மூலம் எச்.ஐ.வி தொற்று? ?

475

-23605 (1)எச்.ஐ.வி வைரசினால் பரவும் நோய் தொடர்பில் தற்போது இணையத்தளங்கள் மற்றும் தனிமனித இணையத்தளங்களின் ஊடாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித் ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.சில அமைப்புக்கள் இவ்வாறான போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் ஊசிகளின் மூலம் எச்.ஐ.வி தொற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இது முற்றாக போலியான பிரசாரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.