பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமை பரிசில்!!

455

india-sri-lanka11பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புலமைப்பரிசில்கள், கல்விப்பொதுத்தராதர உயர்தரம், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் அரசாங்க தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன.

இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்போர், கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரத்தில் கணிதம் உட்பட்ட பாடங்களில் சித்தி பெற்றிருக்கவேண்டும்.

25வயதுக்கு குறைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பங்கள், நிரப்பப்பட்டு பிறப்புச்சான்றிதழ், கல்வித்தகைமை, பெற்றோரின் வேதனக்கொடுப்பனவு சான்றிதழ், பெருந்தோட்ட முகாமையாளரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை, 36-38, காலிவீதி கொழும்பு-3 இல் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்திலும், 31 ரஜபில்ல மாவத்தை கண்டியில் உள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகரத்திலும் பெற்றுக் கொள்ள முடியும்.