இலங்கையின் புதிய அமைச்சரவை : 42 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் : முழு விபரம் இணைப்பு!!

869

MIn

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று(04.09.2015) வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் 42 அமைச்சர்கள் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று பதவியேற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு

01. ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள்

02. ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரம்

03. காமினி ஜயவிக்கிரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள்

04. நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து

05. எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி

06. லக்ஸ்மன் கிரியெல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்

07. அநுர பிரியதர்ஷன யாப்பா – அனர்த்த முகாமைத்துவம்

08. சுசில் பிரேமஜயந்த – தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு

09. திலக் மாரப்பன – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு

10. ராஜித்த சேனாரத்ன – சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத் துறை

11. ரவி கருணாநாயக்க – நிதி

12. மஹிந்த சமரசிங்க – தொழில்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி

13. மஹிந்த அமரவீர – கடற்தொழில் மற்றும் நீரியில் வளம்

14. துமிந்த திஸாநாயக்க – கமத்தொழில்

15. விஜயதாஸ ராஜபக்ச – புத்தசாசனம்

16. ரஞ்சித் மத்தும பண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவம்

17. கயந்த கருணாதிலக – நாடாளுமன்றம் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகம்

18. சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை

19. அர்ஜூன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

20. என்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன – காணி

21. பி.திகாம்பரம் – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி

22. சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி

23. தலதா அத்துக்கோரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு

24. டி.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து மத அலுவல்கள்

25. சந்திம வீரக்கொடி – பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு

26. தயாசிறி ஜயசேகர – விளையாட்டு

27. சாகல கஜேந்திர ரத்நாயக்க – தெற்கு அபிவிருத்தி

28. ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு

29. மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல்கள்

30. தயா கமகே – ஆரம்பக் கைத்தொழில்

31. ரிசாட் பதியூதீன் – கைத்தொழில் மற்றும் வாணிபம்

32. கபீர் ஹாசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி

33. வஜிர அபேவர்தன – உள்நாட்டலுவல்கள்

34. ரவூப் ஹக்கிம் – நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்

35. அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் – தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகாரம்

36. எஸ்.பி.நாவின்ன – உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி கலாச்சாரம்

37. பாட்டலி சம்பிக்க ரணவக்க – மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி

38. நவீன் திஸாநாயக்க – பெருந்தோட்டக் கைத்தொழில்

39. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி

40. பி.ஹரிசன் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி

41. அகிலவிராஜ் காரியவசம் – கல்வி

42. டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்