அப்துல்கலாமின் கனவை நனவாக்க இலட்சிய இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது! !

424

005bd6c1-100a-4793-bde0-17ee9cf411ca_S_secvpf

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்து 40–வது நாள் நிறைவையொட்டி ராமேசுவரம் பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடந்தது.

இத்தொழுகைக்கு பின்னர் அப்துல்கலாமின் அண்ணன் மகன்களான ஷேக்தாவூத், ஷேக்சலீம் ஆகியோர் முன்னிலையில் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

அப்துல்கலாம் விதைத்த லட்சியக்கனவு விதைப்பு பணியை லட்சிய இளைஞர்களை உருவாக்கும் பணியை வழிநடத்தி செல்ல மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்றும் வகையில் அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது.

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், அறிவார்ந்த விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களை உருவாக்குவதாகும். பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து இந்த அமைப்பு செயல்படும்.

மற்றொரு நோக்கம் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதாகும். இந்தியா 2020 என்ற தொலை நோக்கு பார்வையின் 10 கட்டளைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தலைமையிடம் புதுடெல்லியில் இயங்கும். இதன் அமைப்புகள், செயல்பாடுகள், புதிய நிர்வாகிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிற அக்டோபர் 15–ந்தேதி அப்துல்கலாமின் பிறந்த நாளுக்குள் அறிவிப்புகள் வெளியிடப்படும். அரசியலுக்கும் இந்த அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த சிறப்பு தொழுகையில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், தாமு, சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், அப்துல்கலாமின் நண்பரும், விஞ்ஞானியுமான பால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.