வவுனியாவில் யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரினால் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை!!

544

jaffna1

யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரினால் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த 30 வயதான சதாசிவம்-பிரகாஸ் என்ற இளைஞனும், புதுக்குடியுருப்பு சுதந்திரபுரத்தைச் சேர்ந்தவரும், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட இறுதிவருட மாணவியுமான xxxxx என்ற பெண்ணும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பெண் குறித்த அந்த இளைஞனை விட்டு விலகியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த அந்த இளைஞன் 25/08/2015 (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தினால் குறித்த இளைஞனின் குடும்பம் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி எதற்காக இளைஞனின் காதலை துண்டித்துக் கொண்டார் என்பது தெரியவரவில்லை.