ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கபட்டு இன்றுடன் 69 வருடங்கள் பூர்த்தி !

606

UNP3

ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம அதிதியாக கலந்துகொள்கின்றார்.

1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று தேசபிதா டி. எஸ். சேனநாயக்கா தலைமையில் கட்சி உருவானது. சோல்பரி யாப்பின் கீழ் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேசிய அரசியல் கட்சியொன்றின் அவசியத்தை உணர்ந்தே அன்று ஐ.தே.க. கட்சி உருவாக்கப்பட்டது.

இலங்கை தேசிய சங்கம், சிங்கள மகா சபை, அகில இலங்கை முஸ்லிம் லீக், இலங்கை சோனகர் சங்கம் மற்றும் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் தேச பிதா டி. எஸ். சேனநாயக்கா, எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்கா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கொழும்பு – 07, கறுவா தோட்டத்தில் அமைந்திருந்த ‘பாம் கோர்ட்’ மாளிகையில் ஒன்று கூடி கலந்துரையாடி இணக்கப்பாடுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.