
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் முயற்சிக்கு எதிராக தமி ழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வை.கோபாலசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த யோசனை நிறைவேற்றப்படுமானால் அதற்கு ஆதரவு அளிக்கும் முதல் ஆளாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே அவசியம் என்றும் அவர் பள்ளடம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டு ள்ளதாக த ஹிந்து செய்தி வெளி யிட்டுள்ளது.