மட்டு – கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது!!

562

Arrest-Handcuffs-Generic-720x480

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில்  புதையல் தோண்டுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை கைதுசெய்ததாக கொக்கடிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.பெர்ணாண்டோ தெரிவித்தார்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

6 பேரைக் கொண்ட குழுவினர் புதையல் தோண்டுவதற்காக கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதிக்கு சென்றமையை அவதானித்த பொதுமக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் மூன்று பேரை கைதுசெய்தனர்.

இதேவேளை, மேலும் மூன்று பேர் தப்பிச்சென்றுள்ளனர்.