வவுனியா நகரசபையின் சிற்றூழியர்கள் தமக்கு வருடாந்த சம்பள அதிகரிப்பு நகர சபையினால் வழங்கப்படாததை கண்டித்தும் தாம் சம்பள ரீதியில் மீண்டும் மீண்டும் புறக்கனிக்கப்படுவதாகவும் தெரிவித்து நேற்று (07.09.2015)திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அத்துடன் இது தொடர்பாக தம்மால் முன்னரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளதாகவும் அப்போது இப் பிரச்சினைக்கு ஒரு வார காலப்பகுதிக்குள் இதனை சீர்செய்வதாக நகரசபையினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டமையால் தாம் ஆர்ப்பட்டத்தை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்தனா்.
ஆனால் இதற்கான எந்த நடவடிக்கைகளையும் நகரசபையால் முன்னெடுக்கப்படவில்லை அத்துடன் நகர சபையில் இருந்து சிற்றூழியர்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் இவை எல்லாவற்றிற்கும் சரியான நடவடிக்கைகள் எடுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று நகர சபை சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.
-பிராந்திய செய்தியாளர் –