வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரின் ஏற்பாட்டில் மறவன்குளம் கிராமத்தில் நடமாடும் சேவை !(படங்கள்)

722

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம். எம் என். ஏஸ் பண்டார தலைமையில் ஈச்சங்குளம், கல்மடு, சாஸ்திரிகூளாங்குளம் மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை முகாமொன்று நேற்று 07.09.2015 (திங்கட்கிழமை) மறவன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய அடையாள அட்டை, பிறப்பு, இறப்பு, திருமணம், பொலிஸ் அறிக்கை, காணி போன்ற ஆவணங்கள் இன்றி நீண்ட காலமாக வசித்து வந்த மக்களுக்கு ஆவணங்களைப் துரிதமாக பெற்றுக் கொள்வதற்காகவே இந்த நடமாடும் செவை முகாம் அமைக்கப்பட்டது.

நேற்று  காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை முகாம் பிற்பகல் 4.30 மணிவரை நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவை முகாமில் வவுனியா மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், கல்மடு, சாஸ்திரிகூளாங்களம், ஈச்சங்குளம், புதுக்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த கிராம சேவையாளர்களும் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

-பிராந்திய செய்தியாளர்-

Vavuniya-police-01-720x480 Vavuniya-police-02-720x480