இலங்கையின் தேசிய வறுமைக்கோட்டு எல்லை 0.510 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் தனியொருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மாதமொன்றிக்கு குறைந்தபட்சம் 3,896 ரூபாவினை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ரீதியான மாதாந்த வறுமைக்கோட்டு அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.