கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்; ரணில்!

447

ranil wikramasinghe_0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மற்றும் அவை தொடர்பில் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுப் பொலிஸ் பிரிவு பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகப் பிரிவு முக்கியஸ்தர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமற்போனோர் தொடர்பில் புதிய அரசாங்கம் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இவ்விசாரணைகளில் புதிய தகவல்கள் பல வெளிவந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு விசார ணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக 2010 ஜனவரி 24ம் திகதி கொஸ்வத்த பிரதேசத்தில் காணாமற் போயிருந்தார்.

இது பற்றிய முறைப்பாடு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் எக்னெலிகொட ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவர் காணாமற்போன விவகாரம் தொடர்பில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இரண்டு கேர்ணல்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றனர்.

பிரபல ஊடகவியலாளரும், ‘சண்டேலீடர்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க 2009 ஜனவரி 8ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்.

இந்த சூட்டுச் சம்பவத்தில் படுகாயமுற்ற அவர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அன்றைய தினம் 1.45 மணிக்கு மரணமானார். அவரது படுகொ¨ல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியாக 2001 இல் பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர். மனித உரிமை மீறல், ஆட்கள் காணாமற் போதல் மற்றும் மனிதப் படுகொலைகள் போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தவர்.

2006 நவம்பர் 10ம் திகதி காலை 7.00 மணியளவில் தொலைக்காட்சி பேட்டி யொன்றின் பின்னர் வீடு திரும்புகையில் 8.45 மணியளவில் நாரஹேன்பிட்டியில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல் லப்பட்டார்.

அதேவேளை, பிரபல ரகர் விளையாட்டு வீரரான வkம் தாஜூதீன் 2012 மே மாதம் 17ம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

வாகனம் தீப்பற்றியதால் அவரது மரணம் ஏற்பட்டதாக விசார ணைகளில் தெரிய வந்ததுடன் மீண்டும் அவ்விசார ணைகள் முழுக்கிவிடப்பட்டு அந்த மரணம் படுகொலை என சந்தே கிக்கப்படும் நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற் றங்களையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறியத்தருமாறு விசாரணைகளில் ஈடுபட் டுள்ள அதிகாரிகளைப் பணித்துள்ளார்.