காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் நிதியுதவியுடன் கணேசபுரத்தில் வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள கணேசபுரம் பகுதியில் குடியிருந்த மக்கள் வன்செயல் காரணமாக 1990 களில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து தற்போது இப் பகுதியில் மீளக்குடியமர்ந்து வரும் நிலையில் இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனடிப்படையில், அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியுடன் பிரதான வீதிக்கு மின்விளக்குகள் பொருத்தும் ஆரம்ப நிகழ்வு கணேசபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் திங்கள் கிழமை (07.09) நடைபெற்றது.
கணேசபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் உறுப்பினர் திரு.ராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபையின் செயலாளர் விஜயதாஸ், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் நடேசன் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொணடனர்.