காட்டுயானைகளை கட்டுபடுத்தும் நோக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியுடன் பிரதான வீதிக்கு மின்விளக்குகள் பொருத்தும் ஆரம்ப நிகழ்வு கணேசபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் திங்கள் கிழமை (07.09) நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகன் சுகாதார அமைச்சர் தனது அமைச்சு மீள்குடியேற்ற கிராமங்களின் அபிவிருத்தியில் கூடிய அக்கறை செலுத்துவதாகவும் அதனடிப்படையில்தான் 10 மில்லியன் ரூபா செலவில் கிராமிய வைத்தியசாலையொன்று கணேசபுரத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒரு கிராமத்தின் அபிவிருத்தியில் கல்வி, சுகாதார துறைகளின் அபிவிருத்தி மிக முக்கியமானதென்றும் அவற்றை படிப்படியாக பூர்த்திசெய்ய வடக்கு மாகாணசபை அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்தார்.