கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி நுவரெலியா அகரபத்தன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
வஸீம் தாஜுதீனின் விபத்துக்குள்ளான பகுதியில் குறித்த யைடக்கத் தொலைபேசியை கண்டெடுத்துள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் 2012 ஆண்டு சாலிக்கா மைதானத்துக்கு அருகில் இருந்த கடையொன்றில் ஊழியராக கடமையாற்றி கொண்டிருந்த போதே இந்த கையடக்கத் தொலைபேசியை கண்டெடுத்துள்ளார்.
இதனையடுத்து தனது மகனிடம் குறித்த கையடக்கத் தொலைபேசியை கொடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த கையடக்கத் தொலைபேசியானது IMEI எண் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.