இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியடைந்த நிலையில் இலங்கையணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையிலேயே இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.