அமெரிக்க ஓபன் டெனிஸ் காலிறுதிக்கு சானியா மிர்சா- ஹிங்கிஸ் ஜோடி!

436
7061
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சானியா மிர்சா- ஹிங்கிஸ் ஜோடி 3-வது சுற்றில் மிக்கெல்லா கிராஜிசெக் (நெதர்லாந்து)- பார்போரா ஸ்ட்ரைகோவா (செக்குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா ஜோடி 6-3இ 6-0 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முதல் செட்டில் சற்று ஈடுகொடுத்த எதிரணி வீராங்கனைகளால் 2-வது செட்டில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 2-வது செட்டை சானியா ஜோடி 6-0 என எளிதில் கைப்பற்றியது.
காலிறுதியில் சானியா ஜோடி சீன தைபே ஜோடியான யங் ஜன் சான் – ஹயோ சிங் சான்-ஐ எதிர்கொள்கிறது. சானியா ஜோடி விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.