வவுனியாவில் கொள்கை திட்டமிடல் கூட்டம் (08.09) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்பொர் கூடத்தில் இடம்பெற்றது.
வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் திணைக்களங்கள் ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் செயற்படுத்த வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக திணைக்கள தலைவர்களால் எடுத்துக்கூறப்பட்டிருந்தது.
இதன்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான திணைக்கள பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வட மாகாண பிரதம செயலாளர் உட்பட திணைக்கள்தலைவர்கள் ம்றறும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
-பிராந்திய செய்தியாளர் –