வவுனியா தெற்கு பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டிக்கு ஏற்பாடு!

769

logo-1

உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் எதிர்வரும் 15.09.2015 ந்திகதி காலை 6.00 மணிக்கு மரதன் ஓட்ட போட்டி நடாத்தப்படவுள்ளது.

இம்மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொள்வோர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைமைக்காரியாலயத்தில் எதிர்வரும் 10.09.2015 க்கு முன்னர் பெயர் விபரங்களினை சமர்ப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 16 வயதிற்கு மேற்பட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் மட்டுமே பங்குபற்றலாம் என்பதுடன் 15.09.2015 ந்திகதி காலை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் உடற்தகுதி பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் பிரதேச சபையின் செயலளார் திருமதி சுகந்தி கிசோர் தெரிவித்தார்.