இலட்சோப லட்சம் பக்தர்கள் புடைசூழ ரதமேறி அருள்புரிந்த நல்லை கந்தன்!!(படங்கள் வீடியோ)

416

யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும்.

தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவழா இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று (11) வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஈழத் திரு நாட்டின் வட புலத்தில் யாழ். மண்ணில் நல்லை நகரில் கோயில் கொண்டு எழுந்தருளிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.

நாளொரு அழகு பெற்ற நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் வள்ளி தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணிக்கப்பட்ட நல்லைக் கந்தன் வீதி வலம் வந்தான்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவார பாரயணங்கள் ஒலிக்க, பஜனைகள் இசைக்க கந்தப்பெருமான் தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்றைய தேர்த்திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ்ந்து வடம் பிடிக்க அழகு மிகு நல்லைக் கந்தன் தேர் ஏறி வந்த காட்சி பக்தர்களின் உள்ளத்தை உருக்கியது.

வவுனியா நெற்  நிகழ்வுகளுடன்

நல்லையம்பதியிலிருந்து

படங்கள் :நிருஜன்

வீடியோ : நயினை .குமரன் 

11150168_1410196219007970_4730391632424927823_n 11217165_1410196429007949_5628282651443190939_n 11225209_1410193465674912_9077136267346717930_n 11934960_1410192819008310_5653638948279605764_n 11987006_1632535027016552_5504537059924159970_n 11988551_1632581413678580_3247231942190821377_n 11995962_1410196682341257_4791717943220332619_n 11998979_1410192502341675_7078593581864480433_n 12002116_1632535297016525_3143092421453423680_n 12002123_1410196509007941_7699095887883004031_n 12002840_1410192849008307_3395909359384317425_n 12002943_1410194955674763_7703706549288288827_n 12002982_1410197002341225_6662994819051096191_n 12003360_1632581407011914_7287738013035719521_n 12003379_1410192575675001_4203057666186380796_n 12004968_1410193299008262_3393349830952659527_n 12006370_1410196049007987_8537420030375280548_n 12011412_1410193462341579_7704273168664535560_n

12222 122222 12222222 122222222 1222222222