வவுனியாவில் புரட்சி கவிஞன் மகாகவி பாரதியாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!(படங்கள்)

678

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில், சிறிசங்கர் அனுசரணையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பாரதியின் பெருமைகளை பறைசாற்றும் கவிதையினை குரும்பையூர் ஜங்கரன் வழங்கியதுடன், தமிழ்மணி அகளங்கனின் “செந்தமிழும் நாப்பழக்கம்” எனும் நூலும் வெளியிடப்பட்டது.

இவ் நிகழ்வில்,   வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாவட்ட இணைப்பாளர் திரு க,சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இவ் நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா சமூகசேவை உத்தியோகத்தர் திரு எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள்  மற்றும்  சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

10593012_509827342524571_6989167639788106338_n 11150560_509827369191235_8745826472912044541_n 11209420_509827469191225_8388692996335398216_n 11986941_509827619191210_6977976502339146155_n 11993283_509827642524541_4928503570154655857_n 11998809_509827639191208_6941622328638463239_n 11999042_509827412524564_3807928127401641542_n 12002895_509827525857886_729077147683298271_n 12003268_509827792524526_7069796278255071522_n