தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த பட்சமாக எதுவித குற்றச்சாட்டுகளும் அற்ற நிலையில், நீண்டகாலமாக தடுத்து வைக்கபப்பட்டுள்ள 273 கைதிகளையேனும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதுவித குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் பதியப்படாத நிலையில் குறித்த கைதிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.