யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதில் காயமடைந்த 32 அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மினிவானில் 40 பேர் பயணித்தனர் எனவும் இதில் 32 பேரை வரை காயமடைந்துள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தபோதிலும் எனினும் தெய்வாதீனமான எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அச்சுவேலி காவற்துறையின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-பாஸ்கரன் கதீசன் –