
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை)எதிர்வரும் 14.09.2015 வெள்ளிகிழமையன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலையின் 82 வது நிறைவை கொண்டாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
1933 ஆம் ஆரம்பிக்கபட்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 82 ஆண்டுகளை கடந்து வன்னிமண்ணில் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து தனக்கென ஒரு இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்து வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையாக திகழ்கின்றமை யாவரும் அறிந்ததே.
மேற்படி 82 ஆண்டு நிறைவினை கொண்டாட பழைய மாணவர் சங்கம் 14.09.2015 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு கல்லூரியின் ஐயாத்துரை மண்டபத்தில் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதுடன் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் ஆகியோரை கலந்து கொள்ளும் வண்ணம் அழைத்து நிற்கிறது .
தகவல் :
தலைவர்
பழைய மாணவர் சங்கம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் .





