வவுனியா செயலகத்தில் இடம்பெற்ற உரமானிய காப்புறுதித்திட்ட நட்டஈடு வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

547

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச்  சபையினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரா அவர்களினால் உரமானிய காப்புறுதித்திட்ட நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று(13.09) காலை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பயணாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அசராங்க அதிபர், கமநல உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வவுனியா கமநலக்காப்புறுதிச்சபை உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் உரையாற்றிய வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட கமத்தொழில் மற்றும் கமநலக்காப்புறுதிச்சபையின் பதில் உதவிப்பணிப்பாளர் திரு. பு. பூரணச்சந்திரன்
வவுனியா மாவட்டத்தில் 420 கமக்காரர்களுக்கு 1636624 ரூபா கொடுப்பனவுகளில் முதற்கட்டமாக 90கமக்காரர்களுக்கு வழங்கும் வைபவம் இடம்பெற்றது. மிகுதி அவர்களது பிரதேசத்திலிருக்கும் கமநல நிலையம் ஊடாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் கமத்தொழில் காப்புறுதிச்சபையால் நடைமுறைப்படுத்தப்படும் காப்புறுதி நட்டஈடுகள் 49 கமக்காரர்களுக்கு ரூபா 2078211 அவர்களது வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. என்று மேலும் தெரிவித்தார்.

1 2 3 4 5 6