வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் துணிகரமான திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள இரண்டு ஆசிரியைகளும் (பிள்ளைகள்) தயாரும் (திருமதி. இந்திரன் )வசித்து வந்த வீடொன்றில் இன்று அதிகாலை வீட்டார் உறக்கத்திலிருந்த சமயம்
குசினியின் பின்புற இடைவெளியொன்றினூடாக உட்புகுந்த திருடர்கள் வீட்டில் உள்ள குசியின் யன்னலை கழட்டி பின்பு அறை ஒன்றில் இருந்த கான் பாக் உட்பட பல்வேறு பாக்குகளை எடுத்துச் சென்று கான்பாக்கில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர் இதே வேளை குசினியில் இருந்த் உணவையும் திருடர்கள் சாப்பிட்;டுச் சென்றுள்ளனர்
வீட்டு உரிமையாளர்கள் காலை 5.30 மணிக்கு விழித்து பாhத்தபோது; பணம் திருட்டு போனதையும் அறிந்து கொண்டு ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தினர் ஓமந்தை பொலிசார் திருட்சம்பவம் குறித்து வீட்டாரிடம் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
-பிராந்திய செய்தியாளர் –