வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் மூளை செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில்!!

636

Boy

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மூளை செயலிழந்த நிலையில் வெஷ்மிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு புகலிடம் கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற வவுனியாவைச் சேர்ந்த 34 வயதான ரிஷ்வி என்பவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இவரது மைத்துனர் தியாகன்..

வாசற்படியில் இருந்து சறுக்கி விழுந்தபோது தலையில் பாரிய அடி ஏற்பட்டதால் மூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு மூளை செயலிழந்துள்ளதாக தெரிவித்ததுடன் இவரது உடல் பாகங்களை தானம் செய்வதற்காக வவுனியாவில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புகலிடம் கோரி அவுஸ்திரேவியாவிற்கு சென்ற பலர் அவர்களது புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதுடன் மனவிரக்திக்கும் உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

download